Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 நவம்பர் 26 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய உரிமை அனைவருக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், அதற்கென ஒரு பொதுவான தினத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அவர்களது அனைத்து உறவுகளுக்கும் இருக்க வேண்டும். இதற்கு அனுமதி பெறப்பட வேண்டும் என்ற நிலை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
அதே நேரம், உயிரிழந்த உறவுகளுக்கான சமய அனுஸ்டானங்களை மேற்கொள்ள வசதியாக வடக்கின் ஓமந்தைப் பகுதியில் ஒரு பொதுவான இடத்தில் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
ஒரு பொது தினத்தை இறந்த உறவுகளின் நினைவு நாளாகப் பிரகடனப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ் விடயங்களை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தான் ஏற்கெனவே தனி நபர் பிரேரணை கொண்டு வந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 minute ago
4 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago
26 Aug 2025