2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அடுத்துவரும் 3 ஆண்டுகளும் சுற்றுலா முதலீட்டு ஆண்டுகள்

Princiya Dixci   / 2016 நவம்பர் 28 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுபீட்ம்மிக்க இலங்கையை உருவாக்குவதற்காக, எதிர்வரும் 2017ஆம், 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆகிய ஆண்டுகள் சுற்றுலா முதலீட்டு ஆண்டுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாவது ஆசிய ஹோட்டல் மற்றும் சுற்றுலா முதலீட்டு மாநாடு, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை ஆரம்பமானபோது, ஜனாதிபதியினால் இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டது.

2020ஆம் ஆண்டளவில் இலங்கையின் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை பெறவேண்டிய சவால்மிக்க வெற்றிகள் தொடர்பில் அடுத்துவரும் மூன்று ஆண்டுகள் திட்டமிடும் நோக்கிலேயே இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையின் ஹோட்டல்கள் உள்ளிட்ட சுற்றுலா முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு, நாளை 29ஆம் திகதிவரை, ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் 300க்கும் அதிகமானோர் பங்குபற்றுகின்றனர்.

இலங்கையின் சுற்றுலா கூட்டமைப்பின் தலைவரும், ஹோட்டல் மற்றும் சுற்றுலா முதலீட்டு ஆசிய மாநாட்டின் இலங்கை ஏற்பாட்டாளருமான பிரபாத் உக்வத்தினால், ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அர்ஜுன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, உலக சுற்றுலா சமேளனத்தின் செயலாளர் ஜெராட் லோலஸ் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .