2025 மே 12, திங்கட்கிழமை

அடுத்த அரசியலமைப்பு சபையின் செயலாளர் யார்?

S.Renuka   / 2025 மே 12 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றிடமாக உள்ள அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிக்க  பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தித்தாள் விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியை வகித்த முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும் 1 ஆம் திகதி பதவி விலக உள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பித்தார்.
 அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

தம்மிக்க தசநாயக்க மே 25, 2023 அன்று பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 

ஓய்வு பெற்ற பிறகு, அதே ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சபையின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்பு சபை என்பது நாட்டின் நல்லாட்சிக்காக நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். 

சட்டமா அதிபர்,  பொலிஸ் மா அதிபர் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் நியமனமும் அரசியலமைப்பு சபையாலேயே அங்கிகரிக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X