Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2025 மே 12 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று பேருவளை, வலத்தர பகுதியில் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளார்.
அந்த வீட்டில் இருந்த இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ஒருவர் விழுந்துவிட்டதாக பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், காயமடைந்த நபரை உடனடியாக பேருவளை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அவர் மரணமடைந்துவிட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்தே, அந்த நபரின் கள்ளக்காதலி தாக்கியதில், அந்த நபர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் வலத்தர, பேருவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என்றும், 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
57 minute ago
58 minute ago