2025 மே 02, வெள்ளிக்கிழமை

”அடுத்த இரண்டு நாட்களில் கண்டிக்கு வர வேண்டாம்”

Simrith   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித பல் நினைவுச்சின்னத்தின் சிறப்பு காட்சிப்படுத்தலில் கலந்து கொள்வதற்காக, அடுத்த இரண்டு நாட்களுக்கு, ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் கண்டிக்கு வருவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 300,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏற்கனவே அந்த இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் கூட்ட அதிகரிப்பு தொடர்ந்தால் , புதிய பக்தர்கள் நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, வியாழக்கிழமை (24) மற்றும் வெள்ளிக்கிழமை (25) பக்தர்கள் வருகை தருவதைத் தவிர்க்குமாறு இலங்கைப் பொலிஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏப்ரல் 18 ஆம் திகதி தொடங்கிய 'சிறி தலதா வந்தனாவ' ஏப்ரல் 27 ஆம் திகதி வரை தொடரும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .