2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் மைத்திரியே’

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், தேர்தலுக்கு பயப்பட முடியாது. தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே களமிறங்குவார். அத்துடன் பொது மக்களின் அபிப்ராயங்களுக்கு முகங்கொடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .