Editorial / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். நிதர்ஷன்
செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபியை மீண்டும் சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார்.
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாக செம்மணியில் புதிதாக நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் இனந் தெரியாதோரால் இந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டிருந்தது. எனினும், உடனடியாக புதிய நினைவுத் தூபி மீளவும் நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிலையில் மீளவும் இனந் தெரியாதோரால் இத் தூபி, ஞாயிற்றுக்கிழமை (08) அன்று இடித்தழிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த தூபியை சேதமாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என அரச கட்சியினரே யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
08 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
08 Dec 2025