2024 மே 22, புதன்கிழமை

’’அதிக அவதானம்’’ செலுத்த வேண்டிய நிலைக்கு வெப்ப நிலை உயர்வு

Freelancer   / 2024 மே 04 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் "அதிக அவதானம்" செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண்  அதிக அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் "அவதானம் செலுத்தப்பட வேண்டிய" மட்டத்தில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள், நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு காரணமாக உஷ்ணப் பிடிப்புகள் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக அதிக களைப்பு போன்றவற்றை அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .