2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அத்தையுடன் மருமகன் திருமணம்: நிற்கதியாக நிற்கும் மாமா

Editorial   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருமகனே அத்தையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமா வேலைக்குச் சென்றபோது சுவர் ஏறி குதித்து தனது உறவை அத்தையுடன் மருமகன் வளர்த்து வந்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் மருமகனும், அத்தையும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் நூர்பால், ஓட்டுநர். நூர்பாலுக்கு 40 வயதில் ரஞ்சனி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற மனைவி உள்ளார். நூர்பால், ரஞ்சனி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், ரஞ்சனிக்கும், அவரது மருமகனான பிரம்மா ஸ்வரூப் என்பவருக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரஞ்சனியை விட 5 வயது சிறியவர் பிரம்மா ஸ்வரூப். ரஞ்சனியும், பிரம்மாவும் நீண்ட நாட்களாக பாசத்துடன் பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. ஓட்டுநரான நூர்பால் வேலை விஷயமாக அடிக்கடி வெளியில் சென்று விடுவது வழக்கமாம்.

மாமா வீட்டில் இல்லாத நேரம் பார்த்துக் காத்திருக்கும் பிரம்மா ஸ்வரூப் ரஞ்சனியின் வீட்டிற்கு செல்வதும், வருவதுமாகவும், தனிமையில் உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளனர். ஒருகட்டத்தில் பிரம்மா ஸ்வரூப் வந்து செல்வது அப்பகுதி மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. ஆனாலும், ரஞ்சனியின் கணவர் நூர்பாலுக்கு இந்த விஷயம் தெரியாமலேயே இருந்துள்ளது.

தனது உறவினர் என்பதால் பிரம்மா ஸ்வரூப் வருவதை பெரிதாக நினைக்காமல் அவரும் பிரம்மாவை வீட்டிற்குள் அனுமதித்து வந்துள்ளார். நாளடைவில் கிராம மக்களிடையே இந்த தகவல் காட்டுத் தீயாக பரவிய நிலையில், கணவருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் அதிரச்சியடைந்த நூர்பால், தனது மனைவி ரஞ்சனியை அழைத்து விசாரித்துள்ளார்.  

விசாரித்தபோது, பிரம்மா ஸ்வரூப்புடன் திருமணம் தாண்டிய உறவில் இருப்பதை ரஞ்சனியும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், தாங்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நூர்பால் ரஞ்சனியைக் கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளார். ஆனால் ரஞ்சனி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் நான் பிரம்மா ஸ்வரூப்புடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். இதனால், அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

 ஒருகட்டத்தில் இந்த விவகாரம் இருவர் குடும்பத்தினருக்கும் இடையே பூதாகரமாகியுள்ளது. இதற்கிடையே, மருமகன் ஸ்வரூப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக ரஞ்சனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில், ஷஹாபாத் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, மருமகன் பிரம்மா ஸ்வரூப்புடன் காவல் நிலையம் வந்த ரஞ்சனி நான் இந்த வழக்கைத் தொடர விரும்பவில்லை. பிரம்மா ஸ்வரூப்புடன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, இருவரும் மாலையை மாற்றிக் கொண்டுள்ளனர். பிரம்மா ஸ்வரூப்பும் தனது அத்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமணத்துக்கு இரு வீட்டார் குடும்பத்தினரும ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விவகாரத்து வாங்காமல் வேறொரு நபரை எப்படி திருமணம் செய்ய முடியும் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து ரஞ்சனியின் கணவர் நூர்பால் கூறுகையில், நான் வெளியில் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் பிரம்மா சுவர் ஏறி குதித்து என் மனைவியைச் சந்திப்பார். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் தங்களுடைய உறவை அவர்கள் தொடர்ந்து வந்துள்ளனர். இது குறித்து முதலில் எனக்குத் தெரியாது. அக்கம்பக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் மூலமாகவே இது எனக்குத் தெரியவந்தது என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .