2025 ஜூலை 05, சனிக்கிழமை

அதிக விலையில் அரிசி விற்பனை; 512 வர்த்தகர்கள் சிக்கினர்

Editorial   / 2019 டிசெம்பர் 22 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆகக்கூடிய சில்லறை விலைக்கு அப்பால், அரிசியை விற்பனை செய்வோருக்கு எந்தவித இடமும் இல்லை என்று புறக்கோட்டை அத்தியாவசிய உணவு இறக்குமதி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை முற்றுகையிடும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றன. 

இதனால், பாரிய அளவிலான அரிசி உரிமையாளர்கள், அரசாங்கத்திற்கு அளித்த உறுதிமொழிக்கு அமைய, மொத்த சந்தைக்கு அரிசி விநியோகிக்கப்படுமென்று, சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களில் 1,430 வியாபார நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு இதன்போது அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 512 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . 
நிர்ணய விலைக்கு அதிகமான விலையில் அரிசி விற்பனை செய்த 89 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பா மற்றும் நாட்டரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையாக 98 ரூபாயை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. 

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த புதிய விலைத்திருத்தம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதிக விலையில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .