2025 மே 01, வியாழக்கிழமை

அதிக வெப்பம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

Freelancer   / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணம் மற்றும் கேகாலை, பதுளை பிரதேசங்களில் நாளை (21) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இந்த சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர் குடித்தல் மற்றும் இயன்றளவு நிழல் பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .