2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

அதிகாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு - 17 பேர் காயம்

J.A. George   / 2022 மார்ச் 16 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்தீஸ்கர் மாநிலம்,  கரியாபந்த் மாவட்டம் ஜோபா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த டிரக்டர் மீது லொறி மோதியது. 

இதில் அந்த டிரக்டருடன் இணைக்கப்பட்டிருந்த வண்டியில் இருந்த  5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்ததாக  கரியாபந்த் மாவட்ட பொலிஸ் அதிகாரி விஸ்வாதிப் யாதவ் தெரிவித்துள்ளார்.

மஜ்ரகட்டா கிராமத்தை  சேர்ந்த சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டு டிராக்டரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்தை  சந்தித்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .