2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

”அநுரவின் முதல் வருடத்தில் 1 பில்லியன் டொலர் முதலீடு ஈர்ப்பு”

Simrith   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முதல் வருடத்தில் இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் (FDI) ஈர்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.

பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளைக் கருத்தில் கொண்டு, பிற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அமைச்சர் ரத்நாயக்க தெரிவித்தார்.

"கடந்த ஒக்டோபர் முதல் இன்று வரை, இலங்கை 1.015 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது. இவை கையெழுத்திடப்பட்ட அல்லது உறுதியளிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் அல்ல, ஆனால் நிறைவேற்றப்பட்ட நிதிகள்" என்று அவர் கூறினார். 

இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) உண்மைகளை மறுபரிசீலனை செய்யலாம் என்று அமைச்சர் ரத்நாயக்க மேலும் கூறினார். 

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X