2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அனுமதியின்றி அறிக்கையிட வேண்டாம்: பிரதமர் உத்தரவு

Kanagaraj   / 2016 மே 02 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா

'எந்தவோர் ஊடக அறிக்கையையும், அந்தந்த அமைச்சர்களின் அனுமதியின்றி வெளியிட வேண்டாம்' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போபகேவுக்கு பணித்துள்ளதாக, பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் விதிகளுக்கமைய செயற்பட வேண்டுமென்றும் அரசியல் பற்றிய எந்தவொரு தகவலை வெளியிடுவதற்கும், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளருக்கு உரிமையில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஊடக அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பல முறை சரிபார்த்துக் கொண்டே அதனை வெளியிட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

'பிரதமருக்கும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலகவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று, நேற்றுத் திங்கட்கிழமை (02) இடம்பெற்றது. இதன்போது, அமைச்சின் செயலாளரும் அழைக்கப்பட்டிருந்தார். இந்தக் கூட்டம் எப்போதும் நடைபெறுவது வழமையானது என்றாலும்இ ஊடக அறிக்கைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக விளக்கமளிப்பதற்கே, அமைச்சின் செயலாளரும் அழைக்கப்பட்டிருந்தார்' என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊடக அமைச்சின் செயலாளரினால் கடந்த வாரம்; வெளியிடப்பட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில், 'ஒன்றிணைந்த எதிர்க்கட்சி' என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X