2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அன்னப்பிரசன்னம் விழாவில் கத்திக்குத்து: மூவருக்கு மரண தண்டனை

Editorial   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்னப்பிரசன்னம் விழாவின் போது 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க  மூன்று பேருக்கு, மரண தண்டனை விதித்தார்.

வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு அன்னப்பிரசன்னம் விழாவின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக மனதுங்க சிரில், பொத்தல கமகே சாந்த குமார மற்றும் சிங்கப்புலிகே ஜெயதிலக ஆகிய மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் நடைபெற்ற அன்னப்பிரசன்னம் விழாவுக்கு  சென்ற வலஸ்முல்ல, பன்சலகொட, பிரதீப் ஹவுஸைச் சேர்ந்த சுது ஹகுருகே இந்திக சமன் குமார, 12/01/2011 அன்று 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .