2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘அனுர கோ ஹோம்’ ஆரம்பம்: ஹிருணிகா, ஆசுக்கு தடை

Editorial   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கியூ வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அனுர கோ ஹோம்’ தொடங்கிவிட்டது என்றார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் இப்போது தொடங்கிவிட்டது என்று கூறினார்.

இந்த அடக்குமுறை ஊர்வலத்திற்கு அதிக ஆயுள் இல்லை என்றும் கவிந்த ஜெயவர்தன கூறினார்.

இதேவேளை, நீதிமன்றத்துக்கு வருகைதந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோரை பொலிஸார் நீதிமன்றத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்ற வழக்கு விசாரணை அறையில் பிரசன்னமாய் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X