S.Renuka / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டை சூறையாடிய டிட்வா புயலால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கை மக்கள் எதிர்கொண்ட உயிர் மற்றும் சொத்து இழப்புகள் குறித்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்(Shehbaz Sharif) செவ்வாய்க்கிழமை (02) அன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்(Shehbaz Sharif), ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
மேலும், டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட அனர்த்த நிலைமை குறித்து கடந்த சில நாட்களாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட சர்வதேசத் தலைவர்கள் பலர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் தமது அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தனர்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025