Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 11 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘போதைப்பொருள் ஒழிப்பை மாணவர்களின் மூலம் கற்றுக்கொள்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் இலக்காக கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசதத்தின் வழிகாட்டலின் கீழ், கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்பிரகாரம், ஜனவரி மாதம் 21 முதல் 25 ஆம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் உட்பட அரச நிறுவனங்கள் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி துறை சார்ந்த அதிகாரிகள்,அதிபர்களை தெளிவூட்டுவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்ததாவது,
போதைப்பொருள் ஒழிப்பை வாழ்க்கையில் பழக்கமாக முன்னெடுக்க வேண்டும். போதைப்பொருளுக்கு மாணவர்கள் அடிமையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது சமூக அழிவுக்கு உந்து சக்தியாக அமையும். ஆகவே இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது. சுற்று வட்ட சமூக சூழல் மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கின்றது. ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்களை தெளிவூட்டுவது மட்டுமன்றி அதற்கான செயற்திறன்மிக்க வேலைத்திட்டங்கள் அவசியம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
8 hours ago