2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் குற்றஞ்சுமத்துவது உகந்ததல்ல’

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கைன் பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க ​வேண்டுமென தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று தெரணியகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எனவே போதைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர் இதற்காக நாடாளுமன்றத்தின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் குற்றஞ்சாட்டுவது சரியான விடயமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேர்மையுடன் தியாகத்துடன் மக்களுக்காக சேவையாற்றும் மக்கள் பிரதிநிதிகள் இருப்பதாகவும், மற்றவர்களை குற்றஞ்சுமத்துவதைப் போன்று மக்களுக்காக சேவையாற்றுபவர்களை பாராட்டவும் வேண்டும் என்றும் அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .