2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அபிவிருத்திகள் குறித்து மக்களுக்கு அறிவிப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்று கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு நிதி நகரத் திட்டத்தை விரைவில் நிர்மாணித்து முடிக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.  

16ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்றுப் புதன்கிழமை (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், “ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொண்டு, நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது, அரசாங்கத்தின் நோக்கம்” என்றார். இதன்படி, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பற்றி, தொடர்ந்தும் கலந்துரையாட, எதிர்வரும் சனிக்கிழமையன்று, பிரேஸிலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவதே, தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு எனவும் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலைத் துறைமுகங்களையும் கட்டுநாயக்க, மத்தல விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

குறிப்பாக, திருகோணமலைத் துறைமுகத்தை, வங்கக் கடலின் கேந்திர நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .