2025 ஜூலை 10, வியாழக்கிழமை

’அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்குக’

Editorial   / 2018 நவம்பர் 03 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமையைப் பொருட்படுத்தாது, நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு, அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் மேம்பாடு மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் அதிகம் தேடுவதை விடுத்து, திணைக்களங்களின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோர் தமக்குரிய பணிகளை, எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்ய வேண்டியதைப் பார்க்க வேண்டியதே சிறந்தது என, ஜனாதிபதி இதன்போது அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் வன அடர்த்தியை உயர்த்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக, 2019ஆம் ஆண்டை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வருடமாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வரட்சியினால் பாதிப்புற்ற நெற்செய்கைக்காக, விதை நெல்லை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் சுற்றுநிரூபமொன்றைத் தயாரிப்பதற்கும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .