2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மின்னணு சான்றிதழ் ஆவண அமைப்பு சேவை

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகமானது, இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் கொன்சியுலர் பிரிவில் சான்றளிக்கப்பட வேண்டிய ஆவணங்களை 2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஏற்றுக்​கொள்வதாக அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டே அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் கொன்சுலார் பிரிவினரால் அத்தாட்சிடப்பட வேண்டிய சான்றிதழ் / ஆவணங்களுக்கான அதே சேவைகளை தூதரகத்தில் (c-Das) சேவை மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் அல்லது இலங்கையர்கள் அல்லாதவர்கள் இலங்கை தூதரகத்தில் சான்றொப்பம் பெற பொருத்தமான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த (c-Das) சேவையின் கீழ், இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் கொன்சுலார் சேவைகள் மட்டுமே இலங்கை தூதரகத்தில் வழங்கப்படும். ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இருந்து பெறவேண்டிய சேவைகளை விண்ணப்பதாரர்கள் வழக்கம் போல் ​செய்து கொள்ள வேண்டும்.

அத்துடன் முழுமையற்ற ஆவணங்கள், புகைப்பட ஆவண பிரதிகளும்  ​சான்றளிக்கப்பட மாட்டாது. 2008.01.01ஆம் திகதிக்குப் பிறகு வழங்கப்பட்ட பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச்சான்றிதழ்கள் மாத்திரமே சான்றளிக்க ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண விபரம் (AED) திர்ஹம் 95.00 ஒவ்வொரு சான்றளிப்புக்கும் ( இலங்கையர்கள்)  (AED) திர்ஹம் 130.00 ஒவ்வொரு சான்றிப்புக்கும் (இலங்கையர்கள் அல்லாதவர்கள்) கொன்சுலார் பிரிவு, இலங்கை துதுரகம் அபுதாபி,  என்ற முகவரிக்கும் 026316444 அல்லது 026352460 ஆகிய தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தொடர்பு கொள்ளலாம்.

சான்றுதிப்படுத்தல்( Attestation) பற்றிய கூடுதல் தகவல்களை www.mfa.gov.lk/consulartypes/documents-Attenstation இல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .