2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அமைச்சரின் மகனும் சிறைவாசம் அனுபவிப்பு

Gavitha   / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதியொருவரின் மகன், போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில், இரண்டாவது தடவையாகவும் சிறைவாசம் அனுபவித்துவருகின்றார் என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரமழான் உற்சவத்தின் போது நான், சிறைச்சாலைக்குச் சென்றிருந்தேன். இந்த மகனை நான் அங்கு கண்டேன். தான் இரண்டாவது தடவையாகவும் சிறைச்சாலைக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பில் அவருடைய தந்தையான அரசியல்வாதியிடம் தெரிவித்தேன். வீட்டில் ஏற்பட்ட சிறு சம்பவத்தின் காரணமாக அவர், இரண்டாவது தடவையாகவும் சிறைக்குச் சென்றிருப்பதாக அவருடைய தந்தை தெரிவித்தார் என்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .