2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அமைச்சர் ரிஷாடின் சகோதரனுக்கு எதிராக முறைப்பாடு

Kanagaraj   / 2016 மே 12 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைத்தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனான வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், போலியான காணி உறுதிப்பத்திரத்தின் ஊடாகக் காணியை விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இவ்விடயத்தை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நேற்று செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தனர்.

தலைமன்னாரில் உள்ள 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதான நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

கொழும்பு-10ஐ வசிப்பிடமாகக் கொண்ட, அப்துல் காசிம் மொஹமட் சலானி என்பவர், நவம்பர் மாதம் 16ஆம் திகதியன்று செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X