2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அமெரிக்காவிற்கு புறப்பட்டார், ஜனாதிபதி

Janu   / 2025 செப்டெம்பர் 23 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது  பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார்.

செப்டெம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .