Freelancer / 2026 பெப்ரவரி 11 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (11) வழங்கப்படவுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட போராட்டத்தின் போது, அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக 42 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணைகளின் ஒரு கட்டமாக, 37 சந்தேகநபர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு கடும் பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த படுகொலைகள் வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
7 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Mar 2026