2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமர்ந்து இருந்தவர்களுக்கு தண்டம்

Editorial   / 2023 மே 15 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமர்ந்து இருந்தமை தவறென தங்களுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு, தண்டப்பணத்தை  பின்னர் செலுத்துவதாக ​உறுதியளித்ததை அடுத்து அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

பொல்ஹாவலயில் இருந்து ரத்மலானை வரை பயணித்த “பௌஸி” அலுவலக ரயில், மூன்றாவது வகுப்பில் பயணிப்பதற்கு நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு, இரண்டாவது வகுப்பில் பயணித்த 45 பேரை, கைது செய்துள்ளதாக ரயில் பாதுகாப்பு இராணுவம் தெரிவித்துள்ளது.

இன்று (15) முன்னெடுக்கப்பட்ட திடீர் பரிசோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1 இலட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய் தண்டப்பணமாக பெறப்படவுள்ளது என்றும் அப்பிரிவினர் அறிவித்தனர்.

மூன்றாவது வகுப்பு நிரம்பியிருந்தமையால் அவர்களால் அமர்ந்திருந்து பயணிக்க முடியாது. எனினும், இரண்டாம் வகுப்பில் அவர்கள் அமர்ந்திருந்து பயணித்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .