Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 29 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (29) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதில்லையென, அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படவுள்ள இடைக்காலக் கணக்கறிக்கைக்கு எதிரான யோசனையொன்று, நாடாளுடன்றத்தில் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் இது, அரசமைப்பின் 152ஆவது உறுப்புரையை மீறுவதாகவும் தெரிவித்தும், இதனால், இன்றைய சபை அமர்வில் கலந்துகொள்ள முடியாதென, அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, இன்றைய சபை நடவடிக்கைகளை, நாடாளுமன்ற நிகழ்சி நிரலுக்கமைய நடத்துவதற்கு, இணக்கம் காணப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ தரப்பைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago