2025 மே 07, புதன்கிழமை

அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

Freelancer   / 2024 மே 16 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ். மானிப்பாயில் அமைந்துள்ள கிரீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வைத்தியசாலை செயற்பாடுகளை பார்வையிட்டார்.

இதன்போது, வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மேலும், விஜயத்தின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கும் சென்றிருந்தார். 

இதன்போது, மீள் சுழற்சி மற்றும் மரங்களை நடுதல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அமெரிக்காவின் தொடர்சியான ஒத்துழைப்பையும் ஆதரவுக்கான வழிகளையும் ஆராய்வதற்கான சந்திப்புகளை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X