Editorial / 2026 மார்ச் 19 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் அந்தப் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகச் சவால்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.
இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் செர்ஜியோ கோருடன் வருகை தந்துள்ள தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago