2025 ஜூலை 05, சனிக்கிழமை

அமைச்சரவை தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக 3,850 பேரை சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு, இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் இவ்வாறு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக்கொள்வதாக எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு நியமனங்கள் வழங்க எத்தனிப்பதாகவும், பாடசாலை கட்டமைப்புகளுக்கு தேவையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களை முறையாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் என்ற பதவிநிலை பாடசாலை கட்டமைப்பில் இல்லையெனவும், இலங்கை ஆசிரியர் சேவை யாப்பை மீறும் வகையில் இது அமைந்துள்ளதாகவும், தகுதியற்றவர்கள் பாடசாலை கல்விக் கட்டமைப்பில் இணைந்துக்கொள்ள இது வழிசமைக்கும் எனவும்,  ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைகளின் ஊடாக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மாகாண சபைகள் இ​தனை நிராகரித்துள்ள நிலையில், கடந்த 7 ஆம் திகதி கூடிய அமைச்சரவையில், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை, பாரிய பிரச்சினையாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .