2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘அமைச்சரவைப் பத்திரத்தை நீடிப்பதே ஐ.தே.கவின் தேவை’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை தொடர்ந்தும் நீடிப்பதே, ஐக்கிய தேசியக் கட்சியின் தேவையாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது, குறித்த அமைச்சரவை பத்திரத்தை ஆராய்ந்து சபாநாயகருடன் கலந்துரையாடி மீண்டும் ஒரு வாரத்தில் முன்வைக்க அங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு அமைச்சரவை பத்திரம் தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடுவது அவசியமற்ற ஒன்றெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .