2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அமைச்சர் சரத் அமுனுகம சார்க் நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தார்

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அரசியல் நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையொன்று அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, தனித் தனியாகவும் குழுவாகவும் வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு  அரசாங்கத் தரப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டு அ​லுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம சார்க் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், நேபாளம், மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .