2025 ஜூலை 16, புதன்கிழமை

‘அமைச்சர்களின் உறவினர்களே அவர்களின் செயலாளர்கள்’

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் செயலாளர்களாக 75 சதவீதம் கடமையாற்றுபவர்கள் குறிப்பிட்ட அமைச்சர்களின் உறவினர்கள் என அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கு நாட்டை முன்னேற்றுவது குறித்த புதிய அபிப்ராயங்களை வழங்குவதற்கு  எவரும் இல்லையென்றும், அந்த சங்கத்தின் செயலாளர் தேசகீர்த்தி அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனவே அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கும் அமைச்சர்களின் செயலாளர் பதவிகளுக்கு குடும்ப உறவுகளை இணைத்துக்கொள்ள முடியாத வகையில் 1994ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்வரும் காலங்களிலும் நடைமுறைப்படுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சி தலைவர்களிடம் யோசனையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துளளதாகவும், அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X