Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் எதையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் கோரவில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சுப் பதவி எதுவும் தனக்கு வழங்கப்பட்டால், அதை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பில் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி சிறிசேன, நேற்று (30) அதிகாலை, நாடு திரும்பியுள்ள நிலையில், அரசியலில் அதிரடியான முடிவுகளை எடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை மாற்றம் ஒன்றை மேற்கொள்ளப் போகிறாரெனவும், முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளனர்.
இது தொடர்பில், தமிழ் மிரருக்குக் கருத்து தெரிவித்த அவர், தனக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படப் போவதாக, எந்தவொரு செய்தியையும் தான் பார்க்கவில்லை என்றும், அது தொடர்பில் தனக்கு முழுமையாக எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டல் அதனை ஏற்றுக்கொள்வாரா என்று வினவியமைக்கு, தான் எந்தவிதமான அமைச்சுகளையும் தனக்கு வழங்குமாறு கேட்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியினரின் செயற்பாடுகளில் அதிருப்தி காரணமாக, ஒன்றிணைந்த எதிரணியினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகியிருந்தனர். இதன்படி, விளையாட்டுத் துறை அமைச்சிலிருந்து, தயாசிறி ஜயசேகர விலகியிருந்தார். ஆனால், வெளியேறிய ஏனைய 15 பேரைத் தவிர்த்து, சுயாதீனமாகவே தயாசிறி எம்.பி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
39 minute ago
39 minute ago