2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

Freelancer   / 2025 மார்ச் 31 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
 
குறித்த பகுதியில் வீடொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்
 
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கொக்கல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
 
குறித்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ்  தெரிவித்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X