2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அரிசி ஆலையை இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கவும்

George   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, பொன்னகர் பகுதியில் 43 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட அரிசி ஆலை, கடந்த இரு வருடங்களாகியும் இன்னும் திறக்கப்படாதிருப்பதாக அப்பகுதி விவசாய மக்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே, இந்த அரிசி ஆலையை இயங்கச் செய்ய உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மக்கள் தாம் உற்பத்தி செய்கின்ற நெல்லை உத்தரவாத விலைக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மிகவும் குறைந்த விலைக்கு வெளி மாவட்ட வர்த்தகர்களுக்கு தங்களது நெல்லை விற்று, தங்களது நுகர்வுத் தேவைக்கான அரிசியை கூடிய விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

மேற்படி அரிசி ஆலை செயற்படுத்தப்படுமானால், தங்களது உற்பத்திகளை அரிசியாக்கி அதனை இப்பகுதி மக்களின் நுகர்வுத் தேவைக்காக நியாய விலையில் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு இம் மக்களுக்குக் கிட்டும். 

எனவே, இந்த அரிசி ஆலை உடனடியாக இயங்கச் செய்யப்படுவது அத்தியாவசியமாகுமென்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X