2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அரச நிறுவன தலைவர்கள் நியமன பரிந்துரை கையளிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையின் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரை, ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 அரச நிறுவனங்களுக்கான பதவியொன்றுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பரிந்துரைக் குழுவின் உறுப்பினர் கலாநிதி நாலக்க கொடஹேவா கூறியுள்ளார்.

குறித்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அரச நிறுவனங்களுக்கான தகுதிவாய்ந்தோரின பெயர்களைப் பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி செயலாளர், குறித்த குழுவுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .