2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அரச நிறுவனங்களில் தகவல்களை பெற்ற சந்தர்ப்பம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் தகவல்களை மக்கள் பெற்றுக் கொள்வதற்காக இன்று (02) முதல் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தடையின்றி விரைவாக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை பிரச்சினைக்கு உட்படுத்தாத வகையில் குறித்த தகவல்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, விண்ணப்பதாரிகளைக் கோரியுள்ளது.

கடிதங்கள் மூலம் கோரப்படும் தகவல்களை அனுப்புவதில் ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .