2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அரசியல் வளர்ச்சி தொடர்பில் விளக்கத் தீர்மானம்

Gavitha   / 2015 நவம்பர் 16 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து, இலங்கையின் தற்போதைய அரசியல் வளர்;ச்சி தொடர்பில் அவர்களுக்கு விளக்க, இணைந்த எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் குழுவொன்று, நாட்டிலுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களைச் சந்திப்பதற்கு, ஏற்கெனவே நியமனங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த இணைந்த எதிர்க்கட்சிக்கு 48 எம்.பிக்களின் ஆதரவு காணப்படுகிறது. மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, இதற்குத் தலைமை தாங்குகிறார். இந்தக் குழுவானது, அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .