Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு நாட்கள் இடம்பெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவை தொடர்பான வாக்கெடுப்பு, நாளை வியாழக்கிழமை இடம்பெறவிருந்த நிலையில், அது பிற்போடப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இவ்வாரத்தில் கூடி, மேலும் ஆராயவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்மொழியப்பட வேண்டிய அரசியலமைப்புப் பேரவைக்கான வரைவு குறித்து, அமைச்சரவை அடுத்த வாரம் கூடி தீர்மானிக்குமெனத் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் வரைவு, அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெற்ற பிரேரணைகளின் படி, மாற்றஞ்செய்யப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக, அவைத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்துக்கு நேற்று விளக்கமளித்தார். அதன் பின்னர், மாற்றங்கள் தொடர்பாகத் தங்கள் கருத்துகளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
பிரதமர் ரணில் விக்கரமசிங்க, நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றுவதற்கான தீர்மானத்தை, கடந்த மாதம் கொண்டு வந்திருந்தார். அவ்வாறு உருவாக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையே, நாட்டின் புதிய அரசியலமைப்பை வரைவதற்கான பொறுப்பைக் கொண்டிருக்கும்.
கடந்த காலங்களில், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை முன்வைப்பதற்கான பணியில், நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களே ஈடுபட்டிருந்த நிலையில், இம்முறை, முழு நாடாளுமன்றமே அதன் ஆரம்பக்கட்டப் பணியில் ஈடுபட்டிருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago