2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

அர்ச்சுனா எம்.பி. கைது

S.Renuka   / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாவட்ட சு​யேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற  உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு  கோட்டை நீதவான்   செவ்வாய்க்கிழமை (23) அன்று பிடியாணை பிறப்பித்தார்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தமை மற்றும் சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் செப்டெம்ப மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா எம்.பி.  பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X