2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அரசாங்க அச்சுத் திணைக்களம் தயார் நிலையில்

Editorial   / 2018 நவம்பர் 04 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு அவரச வர்த்தமானி அறிவித்தல்களையும் அச்சிடுவதற்காக, நேற்றுக் காலை(03) முதல்  அரசாங்க அச்சுத் திணைக்களம் தயார் நிலையில் இருப்பதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

அவசர வர்த்தமானி அறிவித்தல்  எந்நேரத்தில் வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் என்பதால், அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் பணியாளர்களை அதற்கு தயார் நிலையில் வைத்திருக்கும்படி, ஜனாதிபதி செயலகமும், சபாநாயகர் அலுவலகமும் அறிவுறுத்தியுள்ளதாக அத்திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்று(03) மாலை வரையில் எந்தவொரு வர்த்தமானி அறிவித்தல்களும் அச்சுடுவதற்கான உத்தரவுகள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அரசாங்க அச்சுத் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் அதற்கு முன்னதாகக் கூடுவதற்கான அறிவிப்புக்கள் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிடுவார்  என, கடந்த வௌ்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .