Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.கமல்
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், கடன் குகைக்குள் சிக்கிக்கொண்டுள்ளதை ஏற்கெனவே வெளிப்படுத்திவிட்டதாகத் தெரிவிக்கும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, குறித்த துறைமுகம், சீனக் கடற்படைத் தளமாவதைத் தடுக்கும் பணிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், சீனக் கடற்படைத் தளமாகும் என, ஐக்கிய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் நேற்று (07) வினவியபோதே, அவர் தமிழ் மிரருக்கு கருத்து தெரிவித்த அவர்
மேலும் தெரிவிக்கையில், “ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், கடன் குகைக்குள் சிக்கிக்கொண்டுள்ளதென்ற உண்மையை, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தது.
“அதன் பின்னர் குறித்த துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், இராணுவ நடவடிக்கைகளுக்காகத் துறைமுகம் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எனவே, இனிவரும் காலங்களில், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், சீனாவின் கடற்படைத் தளமாவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை, அரசாங்கம் முன்னெடுக்கும்” என்று தெரிவித்தார்.
அத்துடன் சீனா, ஐ.அமெரிக்கா ஆகிய நாடுகள், ஒன்றுடன் ஒன்று முரண்பாடுடையவை என்பதை ஞாபகமூட்டிய அவர், எனவே ஐ.அமெரிக்க உப ஜனாதிபதியின் கூற்று, அந்த நாடு, சீனாவின் மீது கொண்டுள்ள வெறுப்பை வெளிபடுத்துவதாகவே அமைந்துள்ளது எனவும், இவ்வாறான கருத்துகளுக்கு அச்சப்படத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
39 minute ago
1 hours ago