2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘அரசாங்கம் பலமடையுமே தவிர பலவீனமடையாது’

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் எனத் தெரிவித்த சமுர்த்தி, நுண்நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக   அரசாங்கம் பலமடையுமே தவிர பலவீனமடயாது என்றார்.

எரிபொருள் விலையேற்றத்தைக் கொண்டு எதிர்த்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அடிப்படைக் காரணிகள் ஏதுமின்றிய வகையில் வலுசக்தி
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரவுள்ளார்கள். இதனை சிறந்த முறையில் வெற்றிகொள்வோம் என்றார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு சில  குறைப்பாடுகள்  காணப்படுகின்றன. அவைகள்
திருத்தப்பட்டுள்ளன. கொவிட் தாக்கத்தை கருத்திற்கொண்டு கடந்த ஒரு மாத காலமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு
தளர்த்தப்பட்டுள்ளது.

 பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்பதற்காக சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தளர்த்தப்படவில்லை. கடுமையான முறையில் சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் பயணக் கட்டுப்பாடு தளர்வுக் காலங்களிலும் செயற்படுத்தப்படும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்றிட்டங்களுக்கு, மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .