2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அரிசி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

Nirosh   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

5 இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிகளவில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த வருட இறுதி வரையில் அரிசிக்கான தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நெற் பயிர்ச் செய்கையை விரிவுப்படுத்தி அடுத்த வருடத்தில் அரிசி இறக்குமதியை நிறுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் உணவு, பணவீக்கப் பட்டியலில் இலங்கைக்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளமை கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X