Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 19 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் சந்தையில் சில அரிசி வகைகளுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் சந்தைக்கு இதுவரையில் உரிய முறையில் அரிசி கிடைப்பதில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நாளாந்தம் 6,500 முதல் 6,600 மெற்றிக் டன் அரிசி மக்கள் பாவனைக்காக நுகரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக நேற்று பிற்பகல் வரை சுமார் 16,000 மெற்றிக் டன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அதில் 6,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 10,000 மெற்றிக் டன் நாட்டு அரிசியும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
52 minute ago