2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அரியநேந்திரன் தொடர்பில் திங்கள் முடிவு: மாவை

Editorial   / 2024 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேந்திரன் தொடர்பில் 11 ஆம்  திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி ஐனாதிபதி தேர்தல் தொடர்பில்  இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முன்னர் அக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரான அரியநேந்திரன் பொது  வேட்பாளராக  2024 ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள விடயம்  தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா  தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
 

கட்சியின் மத்திய குழு எதிர்வரும் 11.08.2024 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கூடி ஐனாதிபதி தேர்தல் தொடர்பில்  கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளது.
அதன் பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும் இந்த
நிலையில் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் அக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனத் தெரிவித்த அவர்

பொது வேட்பாளராக  அரியநேந்திரன் அறிவிக்கப்பட்ட பின்னர் என்னை வந்து சந்தித்து விடயத்தை  தெரியப்படுத்தி சென்றுள்ளார் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X