2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் தாக்குதல்: தம்பதிக்கு காயம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள்  இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்ததாக கூறப்படும் தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 கைதான சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

 விருந்தகத்தன் உரிமையாளரும் அவரது மனைவியும் தங்கள் வாகனத்தில் பயணித்தபோது இரண்டு இஸ்ரேலியர்களும் வீதியை வழிமறித்துள்ளனர். இதனால், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னரே, இஸ்ரேலிய பிரஜைகள் இருவரும் அந்த தம்பதியினரை தாக்கியுள்ளனர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். . 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X