2026 மே 09, சனிக்கிழமை

அறுவக்காடு செயற்பாடுகள் தொடர்கின்றன

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறுவக்காடு குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு, குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிரிப்பு தெரிவிக்கவேண்டாம் என, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (09), இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,  கொழும்பின் பல பகுதியில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை, அறுவக்காடு பகுதியில் கொட்டுவதற்கான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை முதல், கெரவலப்பிடிய பகுதியில் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதை, மாநகர சபை மற்றும் மேல் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இடைநிறுத்தின.

இந்த பின்புலத்திலேயே, கொழும்பு குப்பைகளை அறுவக்காடு பகுதியில் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபை நேற்று முதல் நடவடிக்கை எடுத்ததுள்ளது.

இதற்கமைய, நேற்று இரவு கொழும்பிலிருந்து  குப்பைகளை ஏற்றிய 17 லொறிகள் அறுவக்காட்டை சென்றடைந்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .